சிவகார்த்திகேயனின் ‘ப்ரின்ஸ்’ ஹிந்தி டப்பிங் ரைட்ஸை இத்தனை கோடிக்கு கைப்பற்றியதா பிரபல நிறுவனம்?
October 6, 2022 / 11:02 PM IST
|Follow Us
டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். இப்போது இவர் நடிப்பில் ‘அயலான், மாவீரன், ப்ரின்ஸ்’, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்த ‘ப்ரின்ஸ்’ படத்தை ‘ஜாதி ரத்னாலு’ என்ற தெலுங்கு படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் அனுதீப் கேவி இயக்கி வருகிறாராம். இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் உருவாகுகிறது. இதனை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP – சுரேஷ் புரொடக்ஷன்ஸ் – சாந்தி டாக்கீஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
சிவகார்த்திகேயனின் 20-வது படமான இதில் ஹீரோயினாக மரியா ரியாபோஷாப்கா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் சத்யராஜ் நடித்துள்ளார். இதற்கு தமன் இசையமைக்கிறார்.
சமீபத்தில், வெளியிடப்பட்ட இரண்டு பாடல்கள் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை வருகிற அக்டோபர் 21-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸை பிரபல நிறுவனம் ஒன்று ரூ.6 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.