சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் பிரின்ஸ் . இந்த படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார் . படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது . பிரேம்ஜி இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . சத்யராஜ் அவர்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் . நடிகர் சூரி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் .
ஒரு இந்திய இளைஞன் பிரிட்டீஷ் பெண்ணை காதலிக்கும் சிம்பிளான கதைக்களத்தில் தான் சிறப்பான காமெடியை அனுதீப் புகுத்தி உள்ளதாகவும் சிவகார்த்திகேயன் படத்தை பற்றி தெரிவித்து இருந்தார் . டான் படத்தின் கமர்சியல் வெற்றிக்கு பிறகு பிரின்ஸ் படத்தை ரசிகர்கள் பலரும் இந்த படத்தை காண ஆர்வத்துடன் இருந்தனர் .
மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான பிரின்ஸ் படம் தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது . இந்நிலையில் பிரின்ஸ் படம் வெளியான முதல் 13 நாளில் உலக அளவில் 41.44 கோடி வசூல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .