சிவகார்த்திகேயன் தயாரிக்கும் ‘வாழ்’… சிங்கிள் டிராக்கிற்கான கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!
September 5, 2020 / 10:34 PM IST
|Follow Us
டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.
இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், சீமராஜா, Mr.லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, ஹீரோ’ என படங்கள் குவிந்தது. இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர், அயலான்’ மற்றும் இயக்குநர் தேசிங் பெரியசாமி படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரெடியாகி வரும் ‘வாழ்’ படம் தொடர்பாக ஒரு மியூசிக்கல் அப்டேட் கிடைத்துள்ளது. பிரதீப் குமார் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான ‘ஆஹா’-வை வருகிற செப்டம்பர் 7-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இப்படத்தை ‘அருவி’ படம் மூலம் ஃபேமஸான அருண் பிரபு புருஷோத்தமன் இயக்குகிறார். இதில் பிரதீப், பானு, திவா, யாத்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
Our first single #Aahaa from #Vaazhl will be releasing on September 7 😊👍