சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘வாழ்’… ரிலீஸானது சூப்பரான புதிய ட்ரெய்லர்!

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர், அயலான்’ மற்றும் ‘டான்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இது தவிர சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரெடியாகி வரும் படம் ‘வாழ்’.

இப்படத்தை ‘அருவி’ படம் மூலம் ஃபேமஸான அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கி உள்ளார். இதில் பிரதீப், பானு, திவா, யாத்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனின் முதல் படமான ‘அருவி’ சூப்பர் ஹிட்டானதால், ‘வாழ்’ படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில், இப்படத்தை வருகிற ஜூலை 16-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘சோனி லைவ்’-வில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தற்போது, இந்த படத்தின் புதிய ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது.

Share.