OTT-யில் ரிலீஸாகியிருக்கும் ‘வாழ்’ எப்படி இருக்கு?… ட்விட்டர் விமர்சனம்!

  • July 16, 2021 / 02:36 PM IST

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். இப்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர், அயலான்’ மற்றும் ‘டான்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இது தவிர சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரெடியான படம் ‘வாழ்’.

இப்படத்தை ‘அருவி’ படம் மூலம் ஃபேமஸான அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கி உள்ளார். இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனின் முதல் படமான ‘அருவி’ சூப்பர் ஹிட்டானதால், ‘வாழ்’ படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பல மாதங்களாக வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

இந்நிலையில், இன்று (ஜூலை 16-ஆம் தேதி) இப்படம் பிரபல OTT தளமான ‘சோனி லைவ்’-வில் ரிலீஸாகியுள்ளது. இதில் பிரதீப், பானு, திவா, யாத்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்போது, இந்த படத்தை ‘சோனி லைவ்’ டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் பார்த்த ரசிகர்கள், படம் நன்றாக இருந்ததா? இல்லையா? என தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus