அடேங்கப்பா… ‘டாக்டர்’ படத்துக்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

  • August 28, 2022 / 10:22 AM IST

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். ‘மெரினா, 3, மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல்’ ஆகிய படங்களில் தனக்கு கிடைத்த நடிக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் சிவகார்த்திகேயன்.

இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது இவர் நடிப்பில் ‘அயலான், ப்ரின்ஸ், மாவீரன்’, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சிவகார்த்திகேயனின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘டாக்டர்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இதனை இயக்கியிருந்தார். இதில் சிவகார்த்திகேயன் ‘வருண்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் யோகி பாபு, வினய், இளவரசு, அர்ச்சனா, தீபா ஷங்கர், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது, நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்துக்காக ரூ.25 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus