பாண்டிராஜின் ‘மெரினா’ படத்துக்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

  • December 19, 2022 / 09:07 AM IST

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் ‘அயலான், மாவீரன், ப்ரின்ஸ்’, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘ப்ரின்ஸ்’ படம் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. ‘மாவீரன்’ படத்தை ‘மண்டேலா’ புகழ் இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்குகிறார்.

இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த முதல் படம் ‘மெரினா’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான பாண்டிராஜ் இயக்கியிருந்தார்.

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது, நடிகர் சிவகார்த்திகேயன் ‘மெரினா’வுக்காக ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus