அடேங்கப்பா… ‘ப்ரின்ஸ்’-க்காக சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

  • November 16, 2022 / 01:22 PM IST

டிவி டு சினிமா வந்து சில ஆண்டுகளிலேயே முன்னணி ஹீரோக்களின் லிஸ்டில் இடம் பிடித்து மாஸ் காட்டியவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் ‘அயலான், மாவீரன், ப்ரின்ஸ்’, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘ப்ரின்ஸ்’ படம் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை ‘ஜாதி ரத்னாலு’ என்ற தெலுங்கு படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் அனுதீப் கேவி இயக்கியிருந்தார்.

சிவகார்த்திகேயனின் 20-வது படமான இதில் ஹீரோயினாக மரியா ரியாபோஷாப்கா நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோலில் சத்யராஜ் நடித்திருந்தார். இதற்கு தமன் இசையமைத்திருந்தார்.

இதனை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP – சுரேஷ் புரொடக்ஷன்ஸ் – சாந்தி டாக்கீஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது. தற்போது, இந்த படத்துக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus