SK21 : சிவகார்த்திகேயனின் ‘SK21’ ஃபர்ஸ்ட் லுக் டீசரை பார்த்து ரசித்த இயக்குநர் நெல்சன்… வெளியானது முதல் விமர்சனம்!
January 22, 2024 / 09:00 PM IST
|Follow Us
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி படம், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படம் என 2 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் 21-வது படமாம். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘ப்ரேமம்’ படம் மூலம் ஃபேமஸான சாய் பல்லவி நடிக்கிறார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.
இதனை ‘சோனி பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து டாப் ஹீரோக்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ மூலம் தயாரிக்கிறாராம். இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை பார்த்து ரசித்த ‘டாக்டர், பீஸ்ட். ஜெயிலர்’ படங்களின் இயக்குநர் நெல்சன் தனது எக்ஸ் தளத்தில் படக்குழுவினரை பாராட்டி பதிவிட்டுள்ளார். டீசரை வருகிற பிப்ரவரி 17-ஆம் தேதி சிவகாரத்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
Woah!!!! Just saw #SK21 first look teaser!! It’s complete rage ! Can’t wait for the world to see what you have made on this emotional journey @Rajkumar_KP big applause to team #SK21 !
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.