‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் ‘சிவகுமாரின் சபதம்’… வெளியானது ‘சிவகுமார் பொண்டாட்டி’ பாடல் வீடியோ!

நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி. இப்போது ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடிப்பில் ‘அன்பறிவு, சிவகுமாரின் சபதம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘சிவகுமாரின் சபதம்’ படத்தை ஆதியே இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக மாதுரி நடித்து வருகிறார். ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியே இசையமைத்து வரும் இதற்கு அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்து வருகிறார், தீபக்.எஸ்.துவாரக்நாத் படத்தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இதனை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனத்துடன் இணைந்து ஆதியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறாராம்.

Sivakumarin Sabadham Movie Sivakumar Pondati Video Song1

சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. இந்நிலையில், இன்று (ஜூலை 2-ஆம் தேதி) இப்படத்தின் ‘சிவகுமார் பொண்டாட்டி’ என்ற பாடலின் வீடியோவை ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி ட்விட்டரில் ரிலீஸ் செய்துள்ளார். இப்பாடல் வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Share.