‘மாநாடு’வில் எஸ்.ஜே.சூர்யா ரோலில் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி கன்னட ஹீரோவா?

  • December 25, 2021 / 04:43 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவர் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்த ‘மாநாடு’ திரைப்படம் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இந்த படத்தில் ஹீரோயினாக கல்யாணி ப்ரியதர்ஷனும், வில்லன் ரோலில் எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருந்தனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் பிரேம்ஜி அமரன், மனோஜ் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ‘V ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருந்தார்.

இந்த படத்தை ‘SSI புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் சுப்பையா ரிலீஸ் செய்திருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாவதற்கு முன்பு இப்படத்தில் வில்லனாக நடிக்க வைக்க வேண்டும் என இயக்குநர் வெங்கட் பிரபு முன்னணி கன்னட நடிகர் சுதீப்பை அணுகினார் என தகவல் கிடைத்துள்ளது. பின், கால்ஷீட் பிரச்சனை காரணமாக சுதீப்பால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus