முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.
சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ், மோஷன் போஸ்டர், Glimpse மற்றும் ‘நாங்க வேற மாரி’ என்ற பாடலை தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் ரிலீஸ் செய்தது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. படத்தை அடுத்த ஆண்டு (2022) பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.
இந்நிலையில், அஜித் நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2004-யில் ரிலீஸான தமிழ் படம் ‘நியூ’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.ஜே.சூர்யா இயக்கி, ஹீரோவாகவும் நடித்திருந்தார். ஆனால், இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவின் முதல் சாய்ஸாக இருந்தது ‘தல’ அஜித் தானாம். பின், சில காரணங்களால் அஜித்தால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.