எஸ்.ஜே.சூர்யா – ப்ரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடித்துள்ள ‘பொம்மை’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!
June 15, 2023 / 02:01 PM IST
|Follow Us
சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடிப்பில் ‘பொம்மை, இறவாக்காலம், மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள்X, கேம் சேஞ்சர்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘பொம்மை’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான ராதாமோகன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக ப்ரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் சாந்தினி தமிழரசன் நடித்துள்ளார். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. படத்தை நாளை (ஜூன் 16-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இந்த படத்தை பார்த்த ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் “பொம்மை படம் பார்க்க நேர்ந்தது.
நடிப்பரசன் எஸ்.ஜே.சூர்யா தன்னை மீண்டுமொருமுறை பலமான நடிப்பால் பதம் பார்க்கிறார். யுவன் ஷங்கர் ராஜா பின்னியிருக்கிறார். இயக்குநர் ராதாமோகன் வழக்கமான பாணியிலிருந்து விலகி செய்த பொம்மை ரசிக்கவே வைக்கிறது. சிறந்த ஒளிப்பதிவாளரான ரிச்சர்ட்.எம்.நாதன் கண்களால் படம் பளீச்சிடுகிறது. ஒட்டுமொத்த குழுவிற்கும் வெற்றி வாழ்த்துகள்” என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.
#Bommai படம் பார்க்க நேர்ந்தது. நடிப்பரசன் @iam_SJSuryah தன்னை மீண்டுமொருமுறை பலமான நடிப்பால் பதம் பார்க்கிறார்.. @thisisysr பின்னியிருக்கிறார். @Radhamohan_Dir வழக்கமான பாணியிலிருந்து விலகி செய்த பொம்மை ரசிக்கவே வைக்கிறது. சிறந்த ஒளிப்பதிவாளரான @Richardmnathan கண்களால் படம்…