சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இயக்கத்தில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜிகர்தண்டா’. இதில் சித்தார்த், பாபி சிம்ஹா இணைந்து நடித்திருந்தனர்.
இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது, இதன் இரண்டாம் பாகமான ‘ஜிகர்தண்டா டபுள்X’-யின் ஷூட்டிங் இன்று (டிசம்பர் 12-ஆம் தேதி) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரையும் ரிலீஸ் செய்துள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது.
இதில் எஸ்.ஜே.சூர்யா – ராகவா லாரன்ஸ் இணைந்து நடிக்கின்றனர். இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார், திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்து வருகிறார்.