அடேங்கப்பா… எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்த ‘நியூ’ படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

  • February 15, 2023 / 09:12 AM IST

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடிப்பில் ‘பொம்மை, உயர்ந்த மனிதன், இறவாக்காலம், மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள்X’, ராம் சரண் படம் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

எஸ்.ஜே.சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘நியூ’. இதில் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்ததுடன், அவரே இந்த படத்தை இயக்கி, தனது ‘அன்னை மேரி மாதா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் தேவயானி, நாசர், மணிவண்ணன், கிரண், ஐஸ்வர்யா, கருணாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது, இப்படத்தின் மொத்த வசூல் 14.25 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus