சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. ஒரு நடிகராக திரையில் மாஸ் காட்டுவதற்கு முன்பே, எஸ்.ஜே.சூர்யா ஒரு இயக்குநராக சினிமாவில் தன் முத்திரையை பதித்தார். முதல் படமே ‘தல’ அஜித்தை வைத்து இயக்கி ஹிட் கொடுத்தார். அது தான் ‘வாலி’. ‘வாலி’-க்கு பிறகு ‘குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை’ என தொடர்ந்து படங்கள் இயக்கினார்.
இதில் ‘நியூ, இசை, அன்பே ஆருயிரே’வில் ஒரு ஹீரோவாகவும் வலம் வந்து கெத்து காட்டினார் எஸ்.ஜே.சூர்யா. இப்படங்கள் மட்டுமின்றி மற்ற இயக்குநர்கள் இயக்கிய ‘கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி, இறைவி, ஸ்பைடர், மெர்சல், மான்ஸ்டர், மாநாடு, நெஞ்சம் மறப்பதில்லை, டான், கடமையை செய்’ என தொடர்ந்து நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது.
இதில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் இதனை இயக்கியிருந்தார்.
மேலும், மிக முக்கிய ரோலில் ரெஜினா நடித்திருந்தார். இதற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். தற்போது, இந்த படத்துக்காக எஸ்.ஜே.சூர்யா ரூ.75 லட்சம் சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.