எஸ்.ஜே.சூர்யா போலீஸாக நடித்துள்ள ‘வதந்தி’ வெப் சீரிஸ்… வெளியானது ட்ரெய்லர்!

  • November 22, 2022 / 03:23 PM IST

சினிமாவில் பாப்புலர் நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடிப்பில் ‘பொம்மை, உயர்ந்த மனிதன், இறவாக்காலம், மார்க் ஆண்டனி’, ராம் சரண் படம் என ஐந்து படங்களும், ‘வதந்தி’ என்ற வெப் சீரிஸும் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘வதந்தி’ வெப் சீரிஸை ‘கொலைகாரன்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் ஆண்ட்ரு லூயிஸ் இயக்கியுள்ளார். முக்கிய ரோல்களில் சஞ்சனா, லைலா, நாசர், விவேக் பிரசன்னா, ஹரீஷ் பெராடி, ஸ்ம்ருதி வெங்கட், குமரன் தங்கராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சைமன்.கே.கிங் இசையமைத்துள்ளார், சரவணன் ராமசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இதன் ட்ரெய்லரை இன்று ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவ்வெப் சீரிஸை வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-ல் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus