உதறிவிட்ட ரஜினிகாந்த் ! காப்பாற்றிய சிவகார்த்திகேயன் !

  • January 6, 2023 / 12:26 PM IST

தமிழ் சினிமாவில் நாற்பது படங்களுக்கு மேலாக முன்னணியில் இருக்கும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த . இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.இமான் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. இந்த படம் பெரியதாக வெற்றி பெறவில்லை .

பொதுவாக ரஜினிகாந்த் தமிழில் ஏதாவது படம் பார்த்துவிட்டு அது அவருக்கு மிகவும் பிடித்திருந்தால் உடனே அந்த படக்குழுவிற்கு தனது பாராட்டை தெரிவிப்பார் . சமீபத்தில் ஓடிடியில் வெளியான டாணாக்காரன், ‘கே.ஜி.எஃப் 2’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை தொலைபேசியில் பாராட்டி இருந்தார் .அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் டான் . இந்த படத்தை இயக்கி இருந்தவர் இயக்கி இருந்தவர் சிபி சக்கரவர்த்தி . அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் .

டான் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் ” சூப்பர் பா … கடைசி 30 நிமிடம் என்னுடைய கண்ணீரை தடுக்க முடியல ” என்று படக்குழுவிடம் தொலைபேசியில் அழைத்து பேசி இருந்தார் . அதன் பிறகு டான் படத்தின் இயக்குனர் ரஜினிகாந்தை சந்தித்து கதை கூறி உள்ளார் என்று கூறப்பட்டது . மேலும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது என்று கூறப்பட்டது .

இந்நிலையில் சமீபத்தில் முழு கதையும் கேட்ட ரஜினிகாந்த் சிபி சக்கரவர்த்தி கதையை நிராகரித்து விட்டார். இதனால் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி அடுத்து இயக்கும் படத்தின் நாயகன் யார் என்ற கேள்வி எழுந்து இருந்தது தற்போது அந்த கேள்விக்கு விடை கிடைத்துள்ளது .

நடிகர் சிவகார்த்திகேயன் அவரது எஸ்.கே தயாரிப்பு நிறுவனம் மூலம் இயக்குநர் சிபி சக்கரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார் . இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் தான் நாயகனாக நடிக்க உள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus