வேலை செய்ய மறுக்கும் SMALL HOUSE போட்டியாளர்கள்… பரபரப்பாகும் ‘பிக் பாஸ் 7’ வீடு!
October 12, 2023 / 04:15 PM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 6 கடந்த ஆண்டு (2022) அக்டோபர் 9-ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்பட்டு இந்த ஆண்டு (2023) ஜனவரி 22-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. 105 நாட்கள் நடைபெற்ற இந்த சீசனில் அஸீம் டைட்டில் வின்னர் என்றும், விக்ரமன் ரன்னர் அப் என்றும் அறிவிக்கப்பட்டது.
‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 7 கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஷன், வினுஷா தேவி, மணிச்சந்திரா, அக்ஷயா உதயக்குமார், ஜோவிகா விஜயக்குமார், ஐஷு, விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவணா விக்ரம், யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லத்துரை, அனன்யா ராவ், விஜய் ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி அனன்யா ராவ் எலிமினேட் செய்யப்பட்டார். கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி பவா செல்லத்துரை சில காரணங்களால் வெளியேறி விட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் SMALL HOUSE போட்டியாளர்கள் வேலை செய்ய மறுக்கிறார்கள். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.