“ஆரி day 1-ல இருந்து குறை சொல்லிட்டு இருக்கான்”னு சொன்ன சோம்… ‘பிக் பாஸ் 4’ புது ப்ரோமோ!
January 6, 2021 / 07:06 PM IST
|Follow Us
விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது. தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் ‘விஜய் டிவி’ மற்றும் ‘ஜீ தமிழ்’ மூலம் ஃபேமஸான தொகுப்பாளினி அர்ச்சனா என்ட்ரியானார். அதன் பிறகு ரேகா மற்றும் வேல்முருகன் எலிமினேட் செய்யப்பட்டனர். பின், வீட்டிற்குள் வைல்ட் கார்ட் மூலம் பிரபல ஆர்ஜேவும், பாடகியுமான சுசித்ரா என்ட்ரியானார். அதன் பிறகு சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா கார்த்திக், சனம் ஷெட்டி, ஜித்தன் ரமேஷ், அறந்தாங்கி நிஷா மற்றும் அர்ச்சனா எலிமினேட் செய்யப்பட்டனர். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அனிதா சம்பத் எலிமினேட் செய்யப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆஜித் எலிமினேட் செய்யப்பட்டார். தற்போது, விஜய் டிவி தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவில் ஹவுஸ்மேட்ஸ் முன்னிலையில் சோமசேகர் “குறை சொல்ற டாஸ்க் இப்போ தான் வந்திருக்கு. எனக்கு தெரிஞ்சு day 1-ல இருந்து பண்ணிட்டு இருக்கான்னு நினைக்கிறேன் ஆரி. மத்தவங்கள பத்தி குறை சொல்ற ஒரு விஷயம். எங்கிட்ட ஒருத்தவங்க பத்தி நீ பேசியிருக்க, என்ன பத்தி மத்தவங்ககிட்ட பேசியிருக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்” என்று சொல்கிறார்.
அதற்கு ஆரி “பேசியிருக்கேன். எல்லோர்கிட்டயும் எல்லோர பத்தியும் பேசியிருக்கேன்” என்று சொல்கிறார். பின், சோமசேகர் “நான் முடிச்சுக்கிட்டா” என்று சொல்கிறார். அதன் பிறகு ரியோ ராஜ் “ஆரி பிரதர் சொல்ல வந்த point-அ மட்டும் சுருக்கமா சொல்லிட்டு போயிட்டாரு அப்படின்னா, அவருக்கு opposite-ல யாருமே நிற்க முடியாது. so, மத்தவங்களுக்கு நம்மள பிடிக்கணும் அப்படிங்குற எண்ணமும், அதற்கான effort-வும் உங்க life-ல போட்டீங்க அப்படின்னா, அதுவும் உங்க life-அ இன்னும் beautiful ஆக்கும் அப்படின்னு நினைக்குறேன்” என்று சொல்கிறார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.