தமிழ் சினிமாவில் ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். தனுஷ் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானதும், இதனைத் தொடர்ந்து ‘கோவில், மதுர, 7/G ரெயின்போ காலனி, திருட்டு பயலே, புதுப்பேட்டை’ போன்ற பல படங்களில் நடித்தார் சோனியா அகர்வால்.
இவர் 2006-ஆம் ஆண்டு இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின், செல்வராகவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார். அதன் பிறகு மீண்டும் ‘வானம், தடம், அயோக்யா’ போன்ற சில படங்களில் சோனியா அகர்வால் நடித்தார்.
சமீபத்தில், இவர் ‘Tale of two’ என்ற பெயரில் திருமணம் மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை ஃபேஷன் டிசைனர் சிட்னி ஸ்லேடன், இயக்குநர் ஆனந்த் பால்கி, ‘சமையல் சமையல்’ வெங்கடேஷ் பட் மற்றும் பிரியதர்ஷினி ஆகியோருடன் இணைந்து துவங்கினார்.
இப்போது நடிகை சோனியா அகர்வால் நடிப்பில் இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. கடந்த மார்ச் 28-ஆம் தேதி சோனியா அகர்வாலின் பிறந்த நாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, இவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகியுள்ளது.