தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ஜகமே தந்திரம், கர்ணன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என பத்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் கார்த்திக் நரேன் – தனுஷ் காம்போவில் தயாராகும் படத்தின் படப்பிடிப்பு ஜெட் ஸ்பீடில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் ‘சூரரைப் போற்று’ படம் மூலம் ஃபேமஸான கிருஷ்ண குமார் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இதன் ஷூட்டிங்கை 50 நாட்களில் ஒரே ஷெடியூலாக முடிக்க ப்ளான் போட்டுள்ளனர். இதில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சமுத்திரக்கனி, ஸ்ம்ருதி வெங்கட் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வரும் இந்த படத்துக்கு பாப்புலர் பாடலாசிரியர் விவேக் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார்.
Welcoming the young & talented @KK_actoroffl on board for #D43 💐💥@dhanushkraja @karthicknaren_M @MalavikaM_ @gvprakash @thondankani @Lyricist_Vivek @smruthi_venkat pic.twitter.com/WFzzqGFaUE
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) January 17, 2021