தமிழில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “சூரரைப்போற்று”. இந்தப் படத்தின் இந்தி ரீமேக் வரவிருப்பதாகவும் அதில் ஷாகித் கபூர் நடிக்கலாம் என்றும் தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
இந்தியில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஷாகித் கபூர் வரிசையாக ரீமேக் படங்களில் நடித்து வருகிறார். மேலும் அந்த படங்கள் வெற்றிப் படங்களாகவும் அமைகிறது.
இவர் தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கான ‘கபீர் சிங்’ கில் நடித்திருந்தார், இந்த படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து தெலுங்கு படமான ‘ஜெர்ஸி’அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதிலும் ஷாகித் கபூர் தான் ஹீரோ. தற்போது சூரரைப்போற்று படத்திற்காக படக்குழு அவரை அணுகியுள்ளதாகவும், கதை பிடித்திருந்தால் அவரே இந்த படத்திலும் ஹீரோவாக நடிப்பார் என்றும் செய்தி வந்துள்ளது.
இந்தியில் சூர்யா இடத்தில் ஷாகித் கபூர் நடிப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.