தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சூர்யா நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் “சூரரைப்போற்று” இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.
கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் வெளியீடு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்சார் போர்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு ‘யூ’ சர்டிபிகேட் கொடுத்துள்ளார்கள்.மேலும் இந்தத் திரைப்படத்தில் சூர்யா மாறுபட்ட நடிப்பில் அசத்தியிருக்கிறார் என்று சென்சார் போர்டு கூறியுள்ளது.
இப்படி பல செய்திகளுக்குப் பிறகு சூர்யாவின் ரசிகர்கள் சூரரைப்போற்று வெளியீட்டுக்காக ஆவலாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் சூரரைப்போற்று ஓடிடியில் வெளிவரும் என்ற வதந்திகள் பரவி வந்தது. ஆனால் OTTயில் வெளியிட சென்சார் போர்டின் அனுமதி தேவையில்லை என்பதால் இது வதந்தி என்பது உறுதியானது.
ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் சூர்யா 2D என்டர்டெய்ன்மெண்ட் என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமே இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் திரையரங்குகளில் வெளியிடவிருந்த இந்த படத்திற்கு தற்போது ஒரு பெரிய பிரச்சனையை சுதா கொங்கரா ஏற்படுத்தியுள்ளராம்.
இறுதிச்சுற்று தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸுக்கு சுதா கொங்கரா அப்போதே இந்த கதையை சொல்லி வைத்திருந்தாராம். ஆனால் அவர்கள் படத்தை தாமதமாக்கி வருவதால் இந்த கதையை சூர்யாவிடம் கூறி படத்தை இப்போது முடித்து விட்டாராம்.
தற்போது சூரரைப்போற்று கதையை அந்த நிறுவனம் ரிஜிஸ்டர் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யா சுதா கொங்கர்னாவின் மீது மிகவும் அதிர்ப்தியில் இருக்கிறாராம். மேலும் இந்த பிரச்சனையிலிருந்து விடுபட இந்த படத்தின் பட்ஜெட் அளவிற்கு பெரிய தொகையை ஈடாக கொடுத்துள்ளதாம் 2D என்டர்டெயின்மென்ட்.
எவ்வளவு அதிர்ச்சி இருந்தாலும் படம் நன்றாக வந்திருப்பதால் இந்த தொகையை சூர்யா கொடுத்துவிட்டாராம்.