திரையரங்கில் வெளியாகும் சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் !

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான படம் ‘சூரரைப் போற்று’ .குறைந்த பட்ஜெட்டில் மக்களுக்கு சொந்தமாக விமான சேவையை உருவாக்கும் நோக்கில் பயணிக்கும் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்து இருந்தார் . உணர்ச்சிப்பூர்வமான திரைப்படத்தை வழங்கியதால் பலரின் இதயங்களை வென்றது. இப்படத்திற்கு இசையமைத்தவர் ஜி.வி.பிரகாஷ். உலகம் முழுவதும் இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது .

இதனை அடுத்து நடிகர் சூர்யா நடித்த படம் ‘ஜெய் பீம்’. இந்த படம் நிஜ வாழ்க்கை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்ட ஒரு படம். தமிழகத்தின் பழங்குடியின மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக வழக்கறிஞர் சந்துரு எவ்வாறு போராடுகிறார் என்பதை மையமாக வைத்து இப்படம் அமைந்து இருந்தது . இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் திருட்டுக் குற்றம் சாட்டப்பட்டு, போலீஸ் காவலில் இருக்கும் போது மரணம் அடைந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வருகிறது. இப்படத்தில் நீதியரசர் சந்துருவாக சூர்யா நடித்து இருந்தார் .

இந்த இரண்டு படங்களும் உலக அளவில் ரசிகர்களால் கொண்டப்பட்டது . இரண்டு படமுமே அமேசான் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி இருந்தது . இதனால் திரையரங்கில் இந்த இரண்டு படத்தையும் ரசிகர்களால் கொண்டாட முடியவில்லை . இந்நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்த நாள் வருகின்ற 23 -ஆம் தேதி வருகிறது.

இதனால் சென்னையில் உள்ள கிரீன் சினிமாஸ் என்கிற திரையரங்கில் சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் ஆகிய இரண்டு படங்களும் திரைக்கு வர இருக்கின்றன . இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள் .

Share.