சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் கிராபிக் டிசைனர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று தனக்கென தனி அடையாளத்தை வைத்திருக்கிறார்.
சௌந்தர்யா ரஜினிகாந்த் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த “கோவா”திரைப்படத்தை தயாரித்தார்.இயக்குனராக தன் பயணத்தை தன் அப்பாவை வைத்து “கோச்சடையான்” படத்தை இயக்கி தொடங்கினார் சௌந்தர்யா. மேலும் தனுஷ் நடித்த “வேலையில்லா பட்டதாரி 2” படத்தை இவர்தான் இயக்கியிருந்தார்.
இவர் கடந்த 2019ஆம் ஆண்டு விசாகன் வணங்காமுடியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஏற்கனவே ஒரு மகன் இருந்தார். இவர்கள் திருமணமான முதலே மகிழ்ச்சியாக மகனுடனும் கணவருடனும் செலவிடும் நேரங்களை புகைப்படங்களாக வெளியிட்டு வந்தார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.
நடிகர் மற்றும் தொழில் அதிபரான விசாகன் வணங்காமுடி இன்று தனது பிறந்தநாளை தனது மனைவி சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகனுடன் கொண்டாடியுள்ளார். விசாகன் “வஞ்சகர் உலகம்” என்னும் தமிழ் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/soundaryaarajni/status/1278238604582481920
சௌந்தர்யா ரஜினிகாந்த் தற்போது ட்விட்டரில் தன் கணவரின் பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு” ஹாப்பி பர்த்டே ஹஸ்பெண்ட். நீங்கள் நீங்களாக இருப்பதற்கு நன்றி. லவ் யூ!” என்று கியூட்டாக குறிப்பிட்டுள்ளார்.