தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்தவர் எஸ்.பி.ஜனநாதன். இவர் இயக்கிய முதல் படமே சிறந்த படத்துக்கான தேசிய விருதை பெற்றது. அந்த படம் தான் ‘இயற்கை’. இதில் ஷாம், அருண் விஜய் , குட்டி ராதிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு பிறகு இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து ‘ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ ஆகிய படங்களை இயக்கினார்.
தொடர்ந்து நல்ல படைப்புகளை கொடுத்து வரும் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனுக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இவர் இயக்கியுள்ள புதிய படமான ‘லாபம்’-யில் ஹீரோவாக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி தான் நடித்துள்ளார். கடந்த மார்ச் 11-ஆம் தேதி மார்ச் 14-ஆம் தேதி இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயற்கை எய்தினார்.
நேற்று மாலை ‘லாபம்’ படத்தின் செகண்ட் சிங்கிள் டிராக்கை ரிலீஸ் செய்தனர். தற்போது, படத்தை வருகிற ரம்ஜானுக்கு திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை விஜய் சேதுபதியே ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மற்றும் நடிகர் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.
Here’s #YaamiliYaamiliyaa from #Laabam! The film will release on Ramzan!https://t.co/CHl5TtTh7P#LaabamOnRamzan
An @immancomposer musical#SPJhananathan @KalaiActor @vsp_productions @7CsPvtPte @Aaru_Dir @yogeshdir @LahariMusic @proyuvraaj pic.twitter.com/ZlH6sR8Ef1
— VijaySethupathi (@VijaySethuOffl) April 22, 2021