மறைந்த SPB-யின் மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம் தொடர்பான சர்ச்சை… விளக்கமளித்த சரண்!

  • September 28, 2020 / 07:06 PM IST

தமிழ் திரையுலகில் பிரபல பின்னணி பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். 1967-ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மர்யாத ரமண்ணா’ என்ற தெலுங்கு படத்தில் தான் எஸ்.பி.பி பாடிய முதல் பாடல் இடம்பெற்றிருந்தது. இவர் இதுவரை 16 இந்திய மொழிகளில் 40000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். ஆறு முறை சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். இவர் ‘கேளடி கண்மணி, திருடா திருடா, காதலன், நாணயம்’ போன்ற பல படங்களில் நடிகராகவும் வலம் வந்திருக்கிறார்.

சாவித்திரி என்பவரை திருமணம் செய்து கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பல்லவி என்ற மகளும், சரண் என்ற மகனும் உள்ளனர். அதிக பாடல்கள் பாடி கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம்பிடித்த எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தினமும் இவரின் பாடலை கேட்காத ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு தன் குரலால் அனைவரின் லைக்ஸையும் குவித்தவர் எஸ்.பி.பி.

சமீபத்தில், ‘கொரோனா’வால் பாதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி மதியம் 1:04 PM-க்கு சிகிச்சை பலனின்றி SPB இயற்கை எய்தினார். இந்நிலையில், பாடகர் SPB-யின் சிகிச்சைக்கு அவர் அட்மிட் ஆகியிருந்த MGM மருத்துவமனை அதிக பில் போட்டதாகவும், அதை அவரது மகன் சரணால் கட்டமுடியாத சூழல் ஏற்பட்டதால் குடியரசு துணைத் தலைவரை அவர் அணுகியதாகவும், அதன் பிறகே SPB-யின் உடலை மருத்துவமனை ஒப்படைத்தது என்றும் தண்டோரா போடப்பட்டது. தற்போது, இது தொடர்பாக SPB-யின் மகன் சரண் விளக்கம் அளித்துள்ள வீடியோ பதிவு இதோ….

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus