கமல்ஹாசனின் ‘மூன்று முடிச்சு’ படத்துக்காக ஸ்ரீதேவி வாங்கிய சம்பளம் இவ்ளோதானா?

  • July 13, 2023 / 03:53 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன். இவரின் ஆக்ஷன் த்ரில்லர் படமான ‘விக்ரம்’ கடந்த ஆண்டு (2022) ரிலீஸானது. இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. பாக்ஸ் ஆஃபிஸிலும் வசூல் சாதனை படைத்தது.

இப்போது கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, இயக்குநர் மணிரத்னம் படம் மற்றும் இயக்குநர் ஹெச்.வினோத் படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கமலின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மூன்று முடிச்சு’. இதில் கமலுக்கு ஜோடியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோலில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்திருந்தார். இதனை பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் இயக்கியிருந்தார். சூப்பர் ஹிட்டான இந்த படத்துக்காக நடிகை ஸ்ரீதேவி ரூ.5000 சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus