ஸ்ரீப்ரியா இயக்கிய குறும்பட டீசரை வெளியிட்ட கமல்

  • May 21, 2020 / 09:12 PM IST

நடிகை ஸ்ரீப்ரியா இயக்கிய குறும்பட டீசரை உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட்டார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் கொரோனா ஊரடங்கால் மக்கள் வறுமையில் வாடும் நிலையில் தமிழக அரசு மதுக்கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு குரல் கொடுத்து வருகிறார்.நடிகை ஸ்ரீபிரியா சினிமாவில் முன்னணி ஹீரோயினாக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், உலக நாயகன் கமல் ஹாசன் ஆகியோருடன் பல படங்களில் நடித்தவர்.

வாழ்வே மாயம் படம் தற்போது பலருக்கும் நினைவிற்கு வரும் தானே. பின் டிவியில் ஹிட் சீரியலான சின்னப்பாப்பா பெரியபாப்பா காமெடி தொடரில் மாமியாராக நடித்து கலக்கினார்.தற்போது கமல்ஹாசனுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து முக்கிய பொறுப்பு ஆற்றி வருகிறார். தற்போது யசோதா எனும் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

இதில் ஸ்ரீபிரியாவுடன் நடிகர் நாசர், சுஜா வருணியின் கணவர் சிவக்குமார், ஆகியோர் நடித்துள்ளனர். கிரிஷ் பின்னணி இசையமைக்க, நிருத்யா பிள்ளை இசையமைத்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus