ஸ்ருதியின் தென்பாண்டி சீமையிலே “Unplugged”

  • April 16, 2020 / 08:18 PM IST

கமலின் மகள் ஸ்ருதி லாக்டவுன் சமயத்தில் தனது தந்தையின் பாடலை பாடி அசத்தியுள்ளார்.

ஸ்ருதி ஹாசன் கடந்த சில ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் விஜய்சேதுபதியுடன் லாபம் என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால், இசைத்துறையிலும், நடிப்புத்துறையிலும் சாதிக்க முடியாமல் திணறிய அவருக்கு கமல்ஹாசன் அறிவுரை கூறி அதிலிருந்து அவரை மீட்டதாகவும் தகவல் வெளியாகின.

இதற்கெல்லாம் காரணம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேட்டியளித்திருந்த ஸ்ருதி, தனக்கு விஸ்கி பிடிக்கும் என்று கூறியிருந்தார். இதனை தொடர்ந்து அவரை குடிகாரி என்றும், மதுவுக்கு அடிமையானவர் என்றும் சமூக வலைதளத்தில் பலர் விமர்சித்திருந்தனர். இதனால் கடுப்பான ஸ்ருதி, நான் விஸ்கி பிடிக்கும் என்று தான் கூறினேன். தினமும் குடிப்பேன் என்று கூறிவில்லை என காட்டமாக பதிலளித்திருந்தார்.

தற்போது லாக்டவுன் காலத்தில் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்ட ஸ்ருதி, தனது தந்தையின் பிளாக் பஸ்டர் ஹிட் பாடலான “தென்பாண்டி சீமையிலே..” பாடலை பாடி அசத்தி இருக்கிறார். சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் அந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்..

வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் கறுப்பு நிற உடையில், வின்டேஜ் கலர் வீடியோவில் தன்னை மறந்து ஸ்ருதி பாடும் தென்பாண்டி சீமையிலே பாடலை கண்ணை மூடி கேட்டால் சிலிர்ப்பாக தான் இருக்கிறது. கண்ணை திறந்து பார்த்தால் தான், ஸ்ருதி மறந்த அந்த விஸ்கி மேட்டரை மீண்டும் ஆரம்பித்து விட்டாரா என சந்தேகம் எழுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus