அடேங்கப்பா… ஜப்பானில் 31 நாட்களில் ‘RRR’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • November 22, 2022 / 02:40 PM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. ‘பாகுபலி 1 & 2’வின் வெற்றியை தொடர்ந்து பிரம்மாண்ட படைப்பான ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR)-ஐ இயக்கியிருந்தார் எஸ்.எஸ்.ராஜமௌலி. இப்படத்தினை D.V.V. தானய்யா தனது ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் தயாரித்திருந்தார்.

இந்த படம் தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு இந்த ஆண்டு (2022) மார்ச் 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.

இதில் தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோக்களான ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலியா பட், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் மற்றும் பலர் நடித்திருந்தார்கள்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. உலக அளவில் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.1150.10 கோடியாம். இந்நிலையில், இப்படம் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி ஜப்பானில் ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போது, ஜப்பானில் கடந்த 31 நாட்களில் (அக்டோபர் 21 முதல் நவம்பர் 20 வரை) ரூ.16.10 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus