மார்ச் 25-ஆம் தேதி ரிலீஸாகும் ராஜமௌலியின் ‘RRR’… இத்தனை கோடி வசூலித்தால் தான் வெற்றிப்படமா?

  • March 23, 2022 / 02:40 PM IST

சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. ‘பாகுபலி 1 & 2’வின் வெற்றியை தொடர்ந்து பிரம்மாண்ட படைப்பான ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்’ (RRR)-ஐ இயக்கியிருக்கிறார் எஸ்.எஸ்.ராஜமௌலி. இப்படத்தினை D.V.V. தானய்யா தனது ‘DVV எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ மூலம் தயாரித்துள்ளாராம்.

தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலியா பட், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் நடித்துள்ளார்கள்.

சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட மாஸான ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. படத்தை வருகிற மார்ச் 25-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இப்படம் உலகளவில் ரூ.520 கோடி வசூலித்தால் தான் வெற்றிப்படமாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus