கெளதம் மேனன் இயக்கும் ‘சிலம்பரசன் 47’… படத்துக்கு டைட்டில் என்ன தெரியுமா?

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல’, இயக்குநர் சுசீந்திரன் மற்றும் இயக்குநர் ஞானகிரி இயக்க உள்ள புதிய படங்கள் என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சமீபத்தில், சிலம்பரசன் தனது கால்ஷீட் டைரியில் இணைய ஒரு புதிய படத்துக்கு ஓகே சொல்லியிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் வாசுதேவ் மேனன் இயக்க உள்ளாராம். இப்படத்தை ‘வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார். இந்த படத்துக்கு ‘இசை புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

தற்போது, இந்த படத்துக்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனால் நடிகர் சிலம்பரசன் மற்றும் இயக்குநர் கெளதம் மேனனின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர். விரைவில் இப்படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகையின் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.