செம மாஸ் கெட்டப்பில் சிம்பு …வைரலாகும் ஸ்டில்ஸ்

  • October 19, 2022 / 02:10 PM IST

நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வெந்து தணிந்தது காடு . நீண்ட வருடம் கழித்து இயக்குனர் ஜி.வி.எம் அவர்களுடன் இணைந்து பணியாற்றினார் சிம்பு .இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடித்து வருகிறார் . கர்நாடகா மாநிலம் பெல்லாரி எனும் ஊரில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது . இடையில் நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நடிகர் சிம்பு தனது தந்தையின் சிகிச்சைக்காக அயல்நாடு சென்று இதனால் . இதனால் பத்து தல படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தது .

இந்நிலையில் தற்போது பத்து தல படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது . தற்போது சிம்பு பத்து தல படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் ட்ரெண்ட் ஆகி வருகிறது .

பத்து தல படத்தை டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் தினத்தன்று திரையிடலாம் என்ற திட்டத்தில் படக்குழு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus