‘குக் வித் கோமாளி’ சீசன் 2-வில் வின்னரான கனி… STR கொடுத்த சர்ப்ரைஸ்!

  • April 20, 2021 / 01:43 PM IST

சினிமாவில் பாப்புலர் ஹீரோவாக வலம் வருபவர் சிலம்பரசன் TR. பிரபல ஹீரோவும், இயக்குநருமான டி.ராஜேந்தரின் மகனான சிலம்பரசன் ஆரம்பத்தில் ‘உறவைக் காத்த கிளி, மைதிலி என்னை காதலி, ஒரு தாயின் சபதம், எங்க வீட்டு வேலன்’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.

சிலம்பரசன் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்த படம் ‘காதல் அழிவதில்லை’. இந்த படம் சூப்பர் ஹிட்டானதும் சிலம்பரசனுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் படங்கள் குவிந்தது. இப்போது சிலம்பரசன் நடிப்பில் ‘மாநாடு, மஹா, பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன்’, இயக்குநர் சுசீந்திரன் மற்றும் இயக்குநர் ஞானகிரி இயக்க உள்ள புதிய படங்கள் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ (சீசன் 2) ஷோவின் Grand Finale-வில் நடிகர் சிலம்பரசன் ஸ்பெஷல் கெஸ்ட்டாக கலந்து கொண்டார். தற்போது, இந்த ஷோவின் வின்னரும், பாப்புலர் இயக்குநர் திருவின் மனைவியுமான கனியின் வீட்டுக்கு சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் சிலம்பரசன். அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus