விக்ரம் – ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் படத்தில் முக்கியமான பெண் கதாபாத்திரம் !!

  • September 11, 2022 / 08:36 PM IST

இயக்குனர் பா .ரஞ்சித் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் சார்பட்டா பரம்பரை .இந்த படத்தில் ஆர்யா , பசுபதி , ஜான் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தனர் . சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்து இருந்தார் . திரையரங்கில் வெளியாகும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் படம் அமேசான் ஓடிடி -யில் வெளியாகி நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது .

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரமை வைத்து ஒரு படம் ரஞ்சித் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.
நடிகர் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மகான் . இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார் . பாபி சிம்ஹா , சிம்ரன் , துருவ் விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் .
மகான் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் . மிகப்பெரிய பட்ஜெட்டில் பீரியட் ஆக்ஷன் படமாக இந்த படம் உருவாக உள்ளது .மேலும் இந்த திரைப்படம் 3டி பதிப்பையும் கொண்டிருக்கும் என்ற தகவலும் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் இந்த படத்தில் முக்கியமான பெண் கதாபாத்திரம் உள்ளது என்றும் படமுழுக்க அந்த கதாபாத்திரத்திற்கு முக்கிய காட்சியில் இருக்கும் என்று தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் ரஞ்சித் . படத்தின் ஆரம்பக் கட்டப்பணிகள் தற்போது தொடங்கி உள்ளது .விரைவில் அடுத்த அப்டேட் வரும் என்று கூறியுள்ளார் .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus