2008 ஆம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “சுப்பிரமணியபுரம்”. 1980களில் மதுரையில் நடந்த காதல் கதை மற்றும் அதனால் வந்த பிரச்சினைகளை குறித்த கதையை கருவாக கொண்டுள்ளது இந்த படம்.
இந்தப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து வெளியிட்டது சசிகுமார். மேலும் இந்த படத்தில் சசிகுமார் நடித்து இவருடன் ஜெய், சுவாதி, சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருப்பார்கள். 1980களில் இருக்கும் உடை, இடம், மக்கள் என அனைத்தையும் மிகத் துல்லியமாக இந்த படத்தில் இயக்குனர் ரீகிரியேட் செய்திருப்பார். இதற்கான பாராட்டுக்கள் இவருக்கு குவிந்தது.
ஜேம்ஸ் வசந்தன் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில் இந்த படத்தின் காட்சிகளை அழகாக படம் பிடித்து காட்டியிருப்பார்.ராஜாமுகமது இந்த படக்காட்சிகளை எடிட்டிங் செய்தார்.
ஐந்து நண்பர்கள் மற்றும் அதில் ஒருவருக்கு வரும் காதல், பின்பு சமுதாய ஏற்றத்தாழ்வு அதனால் வரும் பிரச்சனை, நடக்கும் கொலை என்று இந்த படத்தின் கதை விறுவிறுவென நகரும். பரமன்,அழகர் என்ற இரு கதாபாத்திரங்கள் மிக நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள். இவர்களை சுற்றி கதைக்கரு அமைந்திருக்கும்.
சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகர் ஜெய் மற்றும் அவருக்கு ஜோடியாக நடித்த ஸ்வாதி, இருவருக்கு பதிலாக முதன்முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு கேட்டது நடிகர் சாந்தனு மற்றும் நடிகை காதல் சந்தியாவையாம்.
ஆனால் இந்தப்படத்தில் நடிக்க இருவரும் தயக்கம் காட்டியதால் ஜெய் மற்றும் ஸ்வாதி இந்த படத்தில் நடித்திருந்தார்களாம். ஏற்கனவே சாந்தனு இது பற்றிய பல மேடைகளில் கூறி புலம்பி விட்டார், ஆனால் காதல் சந்தியாவும் அதேபோல இந்த படத்தில் நடித்திருந்தால் தனக்கு அது ஒரு பெரிய பிரேக்காக இருந்திருக்கும் என்று பலரிடம் ரகசியமாக புலம்பியுள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது.