விஷ்ணு விஷால் எடுத்த திடீர் முடிவு

வெண்ணிலா கபடி குழு படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால் . இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது . இதனை தொடர்ந்து அடுத்த அடித்த படங்களில் நடிக்க தொடங்கினர் . பலே பாண்டியா , குள்ளநரி கூட்டம் , முண்டாசுப்பட்டி , ஜீவா , என தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்தார் .

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான படம் FIR இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது .இதனை தொடர்ந்து மோகன் தாஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் . மேலும் கட்ட குஸ்தி என்ற படத்திலும் நடித்து வருகிறார் . இந்த படம் தெலுங்குவிலும் உருவாகி கொண்டிருக்கிறது . இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து கொண்டு இருக்கிறார் .

சமூக வலைத்தளங்களில் பெரிதும் ஆக்டிவாக இருக்கும் விஷ்ணு விஷால் தற்பொழுது ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார்.சமூக வலைதளங்களில் இருந்து பிரேக் எடுக்க இருப்பதாக பதிவு போட்டுள்ளார். இந்த முடிவுக்கு காரணம் என்ன என்று அவர் தெரிவிக்கவில்லை . விஷ்ணு விஷாலின் இந்த முடிவு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது .

Share.