அடேங்கப்பா… 6 நாட்களில் சுதீப்பின் ‘விக்ராந்த் ரோணா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • August 3, 2022 / 01:16 PM IST

கன்னட சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சுதீப். இவர் நடித்துள்ள புதிய படமான ‘விக்ராந்த் ரோணா’ கடந்த ஜூலை 28-ஆம் தேதி 3D தொழில்நுட்பத்தில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது.

ஆக்ஷன் அட்வெஞ்சர் த்ரில்லர் படமான இதனை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அனூப் பண்டாரி இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் நிரூப் பண்டாரி, நீதா அசோக், ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ள இதற்கு வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 6 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.75.86 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus