Suriya 43 : ‘சூர்யா 43’ஐ இயக்கும் சுதா கொங்கரா… படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

  • December 6, 2023 / 01:39 PM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இப்போது இவர் நடிப்பில் இயக்குநர் சிவாவின் ‘கங்குவா’, இயக்குநர் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா படம் என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கும் படம் சூர்யாவின் கேரியரில் 43-வது படமாம். இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா ஆகியோர் முக்கிய ரோல்களில் நடிக்கவிருக்கிறார்கள். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவிருக்கிறார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட அறிவிப்பு வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஷூட்டிங்கை வருகிற ஜனவரி மாதம் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்துக்கு ‘1965’ என டைட்டில் வைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus