ஒரு ஹீரோ – ஹீரோயின், அதற்கென ஒரு கதைக்களம் என தொடர்ந்து வெப் சீரிஸ் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், பல கதைகளை ஒவ்வொரு எபிசோடிலும் குறும்படம் போல் சொல்லப்படும் வெப் சீரிஸ்களும் உண்டு. அது ஆந்தாலஜி வெப் சீரிஸ் என்று சொல்வார்கள். இந்த ஆந்தாலஜி வெப் சீரிஸ்களில் வரும் கதைகள் ஒரே ஜானரை மையமாக வைத்து உருவாகலாம், அல்லது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் வேறு ஜானரிலும் கதைகள் இருக்கலாம்.
தற்போது, தமிழில் உருவாகியுள்ள புதிய ஆந்தாலஜி வெப் சீரிஸ் தான் ‘நவரசா’. இதில் ஒன்பது குறும்படங்கள் இருக்கிறதாம். இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியுள்ள ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ என்ற குறும்படத்தில் சூர்யா, பிரயாகா மார்ட்டின் நடித்துள்ளனர். இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கியுள்ள ‘எதிரி’ என்ற குறும்படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ரேவதி, அசோக் செல்வன் நடித்துள்ளனர்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘பீஸ்’ என்ற குறும்படத்தில் கெளதம் மேனன், பாபி சிம்ஹா, சனந்த் நடித்துள்ளனர். இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள ‘ப்ராஜெக்ட் அக்னி’ என்ற குறும்படத்தில் அரவிந்த் சாமி, பிரசன்னா, பூர்ணா நடித்துள்ளனர். இயக்குநர் ரதீந்திரன்.ஆர்.பிரசாத் இயக்கியுள்ள ‘இன்மை’ என்ற குறும்படத்தில் சித்தார்த், பார்வதி நடித்துள்ளனர்.
இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ள ‘சம்மர் ஆஃப் 92’ என்ற குறும்படத்தில் யோகி பாபு, ரம்யா நம்பீசன், நெடுமுடி வேணு நடித்துள்ளனர். இயக்குநர் வஸந்த் இயக்கியுள்ள ‘பாயசம்’ என்ற குறும்படத்தில் டெல்லி கணேஷ், அதிதி பாலன், ரோகினி நடித்துள்ளனர். இயக்குநர் சர்ஜுன் இயக்கியுள்ள ‘துணிந்த பின்’ என்ற குறும்படத்தில் அதர்வா, கிஷோர், அஞ்சலி நடித்துள்ளனர்.
நடிகர் அரவிந்த் சாமி இயக்கியுள்ள ‘ரௌத்திரம்’ என்ற குறும்படத்தில் ரித்விகா, ரமேஷ் திலக், ஸ்ரீராம் நடித்துள்ளனர். இதனை இயக்குநர் மணிரத்னம் – ஜெயந்திரா இணைந்து தயாரித்துள்ளனர். இவ்வெப் சீரிஸை வருகிற ஆகஸ்ட் 6-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ குறும்படத்தின் ‘அலை அலையாக’ பாடலை ரிலீஸ் செய்துள்ளனர்.
#AlaiAlaiyaaga from @Suriya_offl 's #GuitarKambiMeleNindru is here🎵💕
Now playing 🔛 @gaanaA @menongautham film 🎥
Music by @singer_karthik
✍️ @madhankarky #PrayagaMartin#Navarasahttps://t.co/85Ch9Djm9j— Think Music (@thinkmusicindia) July 16, 2021