சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கும் ‘நவரசா’ வெப் சீரிஸும் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’, த.செ.ஞானவேல் இயக்கும் ‘ஜெய் பீம்’ என மூன்று படங்களும் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘நவரசா’ வெப் சீரிஸ் கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யில் ரிலீஸானது. ஒன்பது குறும்படங்களை கொண்ட இவ்வெப் சீரிஸில் சூர்யா ‘கிட்டார் கம்பி மேலே நின்று’ என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். டாப் இயக்குநர்களில் ஒருவரான கெளதம் மேனன் இதனை இயக்கியிருந்தார்.
இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரயாகா மார்ட்டின் டூயட் பாடி ஆடியிருந்தார். கார்த்திக் இசையமைத்திருந்த இதற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். தற்போது, இந்த குறும்படத்தில் இடம்பெற்ற ‘நானும்’ என்ற பாடல் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர்.
Sway to the tunes of#Naanum from @Suriya_offl 's #GuitarKambiMeleNindru
Video Song Out Nowhttps://t.co/znv0lzBFVc#Navarasa
A @menongautham film
A @singer_karthik musical@madhankarky #PrayagaMartin @pcsreeram @Netflix_INSouth #ManiSir @JayendrasPOV pic.twitter.com/d7RCEKrwCN
— Think Music (@thinkmusicindia) September 23, 2021