கம்பேக் கொடுக்கும் முருகதாஸ் !

தர்பார் படத்திற்கு பிறகு இயக்குனர் A.R. முருகதாஸ் எந்த ஒரு படமும் இயக்காமல் இருந்தார் . முன்னதாக நடிகர் விஜய்யிடம் ஒரு கதை கூறி இருந்தார் . ஆனால் நடிகர் விஜய்க்கு அந்த கதையில் விருப்பம் இல்லாத காரணத்தினால் அந்த படம் தொடங்கவே இல்லை . இதனை அடுத்து விஜய் தனது அடுத்து படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார் .

முருகதாஸ் அனிமேஷன் படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் இருந்தார் .இந்நிலையில் அந்த படத்தையும் ஆரம்பிக்காத நிலையில் இருந்த முருகதாஸ் தற்பொழுது நடிகர் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரிடம் கதை சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது .

இந்நிலையில் நடிகர் விக்ரமிற்கு கதை பிடித்துப்போக முருகதாஸ் படத்தில் நடிக்க சம்மதித்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது . சமீபத்தில் விக்ரமின் மகான் படம் ஓ.டி.டியில் வெளியானது .மேலும் இவரது நடிப்பில் கோப்ரா , துருவ நட்சத்திரம் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன .

Share.