‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் தனுஷின் 44-வது படம்… ஒப்பந்தமான இரண்டு பிரபலங்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இப்போது தனுஷ் நடிப்பில் தமிழில் ‘ராயன், மாறன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர், மாரி செல்வராஜ், பாலாஜி மோகன் படங்கள், சேகர் கம்முலா படம் (தெலுங்கு / தமிழ் / ஹிந்தி), ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 11 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் மித்ரன்.ஆர்.ஜவஹர் படத்துக்கு இசையமைக்க அனிருத் சமீபத்தில் ஒப்பந்தமானார். தற்போது, இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா மற்றும் பாப்புலர் நடிகர் பிரகாஷ் ராஜ் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘சன் பிக்சர்ஸ்’-ஏ ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படத்தில் நித்யா மேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி ஷங்கர் என மூன்று ஹீரோயின்ஸ் நடிக்க உள்ளனர். இதன் ஷூட்டிங்கை நாளை (ஆகஸ்ட் 5-ஆம் தேதி) முதல் பூஜையுடன் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். இதனால் தனுஷின் ரசிகர்கள் ஹேப்பி மோடுக்கு ஆக்டிவேட் ஆகியுள்ளனர்.

Share.