தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நடிகை சுனைனா சமீபத்தில் “சில்லுக்கருப்பட்டி” படத்தில் இயக்குனர் ஹலிதா சமீமுடன் கிடைத்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படத்தில் இயக்குனர் ஹலிதா சுனைனாவுக்கு ஒரு காட்சியை விளக்கிக் கொண்டிருப்பார். அப்போது துணை இயக்குனர் ஒருவர் பிரேமில் வராமல் இருப்பதற்காக ஒரு ஓரமாக அமர்ந்திருப்பார். இந்த ஃபன் புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டு தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
ஹலிதா இயக்கத்தில் உருவான இந்த ஆந்தாலஜி திரைப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சுனைனா நடித்திருந்தார். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்ததார்கள்.
https://www.instagram.com/p/CE32WPAA_F-/?igshid=lelf2n1w9994
தற்போது சமுத்திரகனி நடிப்பில் ஹலிதா சமீம் “ஏலே” என்ற படத்தை இயக்கி வருகிறார். இயக்குனர் ஷங்கர் தனது ஒரு பேட்டியில் இயக்குனர் ஹலிதா சமீமை பாராட்டிப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.