சுந்தர்.சி – வடிவேலு நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘தலைநகரம்’… இப்படத்தின் மொத்த வசூல் இவ்ளோவா?

  • January 25, 2023 / 12:26 PM IST

‘காமெடி’ என்று சொன்னாலே வடிவேலுவின் பெயர் தான் டக்கென நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு அவரின் காமெடி காட்சிகள் நம் மனதில் பதிந்து விட்டது. நமது வாழ்க்கையிலும், படங்களில் வடிவேலு பேசிய பல வசனங்களை சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் தினமும் நம்மை அறியாமல் பேசிக் கொண்டே தான் இருக்கிறோம்.

வடிவேலுவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘தலைநகரம்’. இந்த படத்தில் ஹீரோவாக இயக்குநர் சுந்தர்.சி நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஜோதிர்மயி டூயட் பாடி ஆடியிருந்தார்.

இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சுராஜ் இயக்கியிருந்தார். முக்கிய ரோல்களில் பிரகாஷ் ராஜ், போஸ் வெங்கட், கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இதில் வடிவேலு ‘நாய் சேகர்’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இப்படத்தின் மொத்த வசூல் ரூ.16.75 கோடியாம்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus