ஜெட் ஸ்பீடில் ரீமேக் படத்தின் முக்கிய பணியை முடித்த சுந்தர்.சி… எப்போ ரிலீஸ் தெரியுமா?

  • October 13, 2020 / 04:12 PM IST

தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

கன்னட திரையுலகில் இந்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் ரிலீஸான படம் ‘மாயாபஜார் 2016’. இந்த படத்தை இயக்குநர் ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கியிருந்தார். இதில் ராஜ்.பி.ஷெட்டி, வசிஸ்தா சிம்ஹா, அச்யுத் குமார், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டானது.

சமீபத்தில், இப்படத்தின் தமிழ் ரீமேக் ரைட்ஸை பிரபல இயக்குநர் சுந்தர்.சி தனது தயாரிப்பு நிறுவனமான ‘அவ்னி மூவீஸ்’ சார்பில் கைப்பற்றினார். இதில் அஷ்வின், பிரசன்னா, ஸ்ருதி மராதே, ஷாம், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்குநர் பத்ரி இயக்கி வருகிறாராம். கடந்த செப்டம்பார் மாதம் 14-ஆம் தேதி இதன் ஷூட்டிங்கை ஆரம்பித்தனர். தற்போது, ஷூட்டிங் முடிந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தை வருகிற தீபாவளிக்கு சன் டிவியில் ஒளிபரப்ப ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.

When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.