தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சுந்தர்.சி. இவர் ஹீரோவாக நடித்துள்ள புதிய படமான ‘தலைநகரம் 2’ நேற்று (ஜூன் 23-ஆம் தேதி) திரையரங்குகளில் ரிலீஸானது.
இந்த படத்தை இயக்குநர் வி.இசட்.துரை இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் பல்லக் லால்வாணி, தம்பி இராமையா மற்றும் பலர் நடித்துள்ளனர். இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார், E.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஆர்.சுதர்சன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இதனை ‘ரைட் ஐ தியேட்டர்ஸ் – அருந்தவம் மூவி மேக்கர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. தற்போது, இந்த படத்தின் முதல் நாள் வசூல் ரூ.56.37 லட்சம் என தகவல் கிடைத்துள்ளது.