சந்தீப் கிஷன் – விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள ‘மைக்கேல்’… வெளியானது மேக்கிங் வீடியோ!

  • February 1, 2023 / 11:57 AM IST

திரையுலகில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சந்தீப் கிஷன். இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘மைக்கேல்’. இந்த படத்தில் சந்தீப் கிஷனுடன் இணைந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும் நடித்துள்ளாராம்.

இப்படத்தை ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் கெளதம் மேனன், திவ்யன்ஷா கௌஷிக், வருண் சந்தேஷ், அய்யப்பா ஷர்மா, அனசுயா, வரலக்ஷ்மி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதனை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP – கரண் C புரொடக்ஷன்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. இதற்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில், இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்தனர். இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. படத்தை வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இன்று இப்படத்தின் மேக்கிங் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர்.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus